Sri-Balaji-Jothidam-in-Tamil
Sri-Balaji-Jothidam-in-Tamil
Sri-Balaji-Jothidam-in-Tamil

உங்கள் குழந்தைகள் பற்றிய கல்வி நிலை

இன்றய உலகின் இன்றியமையாத ஒன்றாக திகழ்வது யாதெனில் கல்வியே ஆகும். எந்தவொரு சமூகத்தினரும் இக்கல்வியைக் கற்பதிலிருந்து விலகிச் செல்வது இன்ரைய நவீன உலகில் மிகவும் அரிதாக காணப் படுகிறது. ஏனெனில் கல்வியின் சிறப்பை அனைத்து சமூகங்களும் புரிந்துள்ளன. இதனால் தான் இன்று கல்வியானது மனிதனின் அத்தியவசிய தேவையாக இருக்கிறது.

கற்றவனுக்கு தனது நாடும் ஊருமே அல்லாமல் எந்த நாடும் ஊரும் தன்னுடைய ஊராகும். இப்படி கல்வி கற்றவனின் சிறப்பு இருக்க, ஒருவன் தான் மரணிக்கும் வரை கல்வி கற்க்காமல் இருந்து தனது காலத்தை கழிப்பது மிகவும் சிரமமானதாகும். இதனையே திருவள்ளுவர் மிகவும் அழகாக வர்ணித்திருக்கிறார்.

*யாதானும் நாடு ஆமால் ஊர் ஆமால் என் ஒருவன்
சாந்துணையும் கல்லாதவாறு* என்று குறிப்பிடுகிறார்.

இன்று மருத்துவம், பொறியியல், அறிவியல் என் பல படிப்புகள் உள்ளது. இதில் எந்த படிப்பு படித்தால் நான் நல்ல நிலைக்கு வருவேன் என்று நீங்கள் கேள்வி கேட்க கூடும். இதற்கான விடையை, எங்கள் குருஜி.P.D.S.சரவணன் அவர்கள் சிறந்த முறையில் கணித்து தருகிறார்கள்.

Sri-Balaji-Jothidam-in-Tamil

உடல் ஆரோக்கியம்

உடல்தான் நமக்கு பிரதானமானது ,அதாவது சுவர் இல்லை என்றால் சித்திரம் இல்லை.ஆதலால் உடல் நிலை முக்கியமாக பார்க்க வேண்டிய ஒன்று .

உங்கள் ஜாதக ரீதியாகவும், கிரகங்களின் ரீதியாகவும் உங்கள் உடல் நிலை எப்படி இருக்கும் அதற்குரிய பரிகாரங்கள் மிக எளிதாகவும் ,சிறப்பாகவும் இந்த இணையதளம் மூலம் தருகிறோம் .

எங்கள் குருஜி.P.D.S.சரவணன் அவர்கள் உங்கள் ஜாதகத்தை ஆராய்ந்து உடல் நிலை எப்படி இருப்பதையும் மற்றும் நோய்வாய்படுவதையும் தெளிவாக உங்களுக்கு எடுத்துரைப்பார். மேலும் எப்பொழுது நோய்வாய்படுவிர்கள், அது எப்பொழுது சரியாகும், அதற்குரிய பரிகாரங்கள் பற்றியும் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

Sri-Balaji-Jothidam-in-Tamil

தொழில் பற்றிய விபரம்

எல்லா தொழிலதிபர்களுக்கும் தங்கள் தொழில் வெற்றியடைய ஆசை. ஒரு மனிதன் நன்றாக திட்டமிட்டு வேலை செய்தும் பெரிய லாபம் பெற முடிவதில்லை. இதற்கான தீர்வுகளை ஜோதிடத்தின் மூலம் ஆராய்ந்து பரிகாரங்கள் சொல்லப்படும். நீங்கள் தொழிலில் தோல்வியடைந்தவரா? கவலை வேண்டாம், ஜோதிடம் மூலம் உங்கள் கெட்ட நேரத்தை போக்கி, நல்ல யோசனைகளை அளித்து உங்களை தொழிலில் வெற்றியடைய உதவி செய்கிறது.

தொழில் மற்றும் வியாபாரம் பற்றி முழு விபரம் உங்கள் ஜாதகப்படி சொல்லப்படும், உங்கள் பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த இடம் இவை அனைத்தும் கொடுத்தால், எங்கள் குருஜி.P.D.S.சரவணன் அவர்கள் உங்கள் ஜாதகத்தை துல்லியமாக கணித்து தருவார்கள்.

wedding
திருமண பொருத்தம்

திருமணப் பொருத்தம் பார்ப்பது மிக மிக முக்கியம். எதற்காக திருமணப் பொருத்தம் பார்க்க வேண்டும் என்று கேட்டால், நம் வாழ்க்கையில் திருமணம் தான் மிக முக்கியமான திருப்புமுனை, இது சரியில்லை என்றால் அனைத்தும் மத்திமம் தான். திருமணப் பொருத்தம் பார்ப்பது கணவன் மற்றும் மனைவிக்கு இடையே பரஸ்பரம், ஆரோக்கியம், விட்டுகொடுக்கும் தன்மை, விசிகரம், ஆயுள், குழந்தை பாக்கியம் இவை அனைத்தும் நன்றாக அமைப்பு இருக்கிறதா என்று பார்ப்பதற்கு.

திருமணப் பொருத்தம் பார்ப்பது நட்சத்திரம் பொருத்தம் பார்ப்பது மட்டுமல்ல. இது பொதுவானது. ஜாதகத்தை முழுமையாக ஆராய்ந்து பொருத்தம் பார்க்க வேண்டும். ராசி, நட்சத்திரம், ஜாதககட்டம், தசாபுத்தி மற்றும் தோஷங்கள் இவை அனைத்தையும் பார்க்க வேண்டும். இது தான் திருமணப் பொருத்தம்.

எங்கள் குருஜி.P.D.S.சரவணன் அவர்கள் உங்கள் ஜாதகத்தை துல்லியமாக கணித்து, திருமணப் பொருத்தம் பற்றிய தகவல்களை தருவார்கள்.

Sri-Balaji-Jothidam-in-Tamil
ஆயுட்கால பலன்கள்

உங்கள் ஜாதக ரீதியாக உங்கள் கிரக நிலைகளை ஆராய்ந்து உங்கள் வாழ்க்கை முழுவதுமான பலன்களை தருவதே எங்கள் நோக்கம் .

உங்கள் வாழ்க்கையில் எந்த காலங்கள் சந்தோஷகரமான காலங்கள், எந்த காலங்களில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் . இந்த மாதிரி முழு விவரங்களும் தருகிறோம் . எப்பொழுது நீங்கள் வீடு வாங்குவீர்கள், எப்பொழுது திருமணம் நடக்கும், எப்பொழுது உங்கள் பிரச்சனைகள் குறையும். வீடு, வாகனம், சொத்து பத்து சேர்க்கைகள்,பொருளாதார ரீதியாக எப்பொழுது முன்னேறுவீர்கள்.

உங்கள் ஜாதக கட்டத்தை முழுமையாக ஆராய்ந்தும்  தசா புத்திகளையும், எந்தெந்த காலங்கள் எப்படி இருக்கும் மற்றும் தோஷ பரிகாரங்களையும் முழு விவரமாகவும் சொல்கிறோம். உங்கள் பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் எங்களிடம் கேட்டு அதற்கான விடைகளை பெறலாம். எந்த பிரச்சனைகளையும் பற்றி கவலை பட தேவையில்லை. அதற்கான முழுமையான தீர்வை எங்கள் அனுபவம் வாய்ந்த ஜோதிடர் உங்களுக்கு தருவார்கள்.

உங்கள் வாழ்கையை பற்றிய முழு விவரங்களையும் கீழ்காணும் விவரங்களில் தருகிறோம். உங்கள் ஜாதகப்படி சனிப்  பெயர்ச்சி, குருப் பெயர்ச்சி, ராகு-கேது பெயர்ச்சி பற்றிய முழு விவரம் தருகிறோம். ஏழரை சனி, அஷ்டமத்து சனி, கண்ட சனி இவை அனைத்தையும் பற்றி முழுமையாக தருகிறோம்.

Sri-Balaji-Jothidam-in-Tamil

வாஸ்து சாஸ்திரம்

வாஸ்து பகவான் தலை பாகம் வடகிழக்கு ஈசானிய பகுதியில் இருபாதம் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. தேவர்களை அசுரர்கள் துன்புறுத்தி சொல்லொனாத் துயரத்தில் ஆழ்த்திய போது கெடு மதி படைத்த அந்த அசுரர்களை ஒன்றும் செய்ய இயலாமல் தவித்த தேவர்கள், சிவபெருமானை அணுகித் தங்களைக் காப்பாற்றுமாறு வேண்டுகின்றனர்.

சிவபெருமான் கடுங்கோபம் கொள்ள அரவது உடலில் இருந்து வெளிப்படுகிறார் வாஸ்து பகவான். வாஸ்து பகவானால் அசுரர்கள் அழிக்கப்படுகின்றனர். அசுரர்களை அழித்தபின் பூமியெங்கம் கெடுமதியாளர்களின் உடல் பரவிக் கிடக்க, சிவபெருமானை வணங்கி நின்ற வாஸ்து பகவான், தங்கள் உடலில் இருந்து தோன்றிய நான் தங்களது ஆணையை ஏற்று நின்கிறேன் என்று கூறுகிறார். உடனே சிவபெருமான் வாஸ்து பகவானை நோக்கி பூமியெங்கும் இறந்து கிடக்கும் அசுரர்களின் உடல்களை அப்புறப்படுத்து என்று கட்டளையிட வாஸ்து பகவான் கட்டளையை ஏற்று அவ்வாறே இட்ட பணியினை செய்து முடிக்கிறார். பணியினை முடித்தவர் மீண்டும் சிவபெருமானை அணுகி அடுத்து தான் என்ன செய்ய வேண்டும் என்று வினவ சிவபெருமான்,

வாஸ்து பகவானிடம் பூமியில் படுத்துறங்கி வருடத்தில் எட்டு நாட்கள் மட்டும் விழித்தெழுந்து என்னை பூஜை செய் என்று கூறுகிறார். வாஸ்து விழிக்கும் நேரம் மக்கள் அவரை வழிபட்டு வந்தால் மாந்தர்கள் வாழும் பூமி மக்கள் பயன்பாடு உள்ள இடங்கள், கட்டடங்கள், புதுமனை போன்ற இடங்களில் உள்ள தோஷங்கள் நீங்கி நன்மைகள் ஏற்படும். வதம் செய்த அரக்கர்களின் உடல்களை அகற்றி பூமியை சுத்தப்படுத்தியது போன்று, மக்கள் வாழும் இடத்தில் கேடுகள் அகன்று ஐஸ்வர்யம் ஏற்படும் என்பது வாஸ்து புராணம் கூறும் உண்மையாகும்.

வி​ரைவு ​தேடல்
empty row
empty row
Powered by
Copyrights © Sri Balaji Jothidam, Paramakudi 2013-2014. All Rights Reserved.