Sri-Balaji-Jothidam-in-Tamil
Sri-Balaji-Jothidam-in-Tamil
Sri-Balaji-Jothidam-in-Tamil

பரிகாரங்கள்

இப்பிரபஞ்சத்தில் கிரகங்கள் ஆக்கிரமிப்புகளின் அடிப்படையில் மக்கள் தங்களது வாழ்க்கையில் ஏகப்பட்ட மாற்றங்களை சந்திக்கின்றனர். சில கிரகங்களின் ஆக்கிரமிப்புகளால் சிலர் தங்களது வாழ்க்கையில் சகல செல்வங்களும் பெற்று, வாழ்க்கையில் மிக உயர்ந்த நலையை அடைந்து, எல்லோரிடமும் நன் மதிப்பையும், பேரும் புகழும் அடைகின்றனர்.

சில கிரகங்களில் ஆக்கிரமிப்புகளால் சிலர் தங்களது வாழ்கையில் ஏகப்பட்ட பிரச்சனைகளைச் சந்தித்து, வாழ்க்கையில் விரக்தி அடைகிறார்கள். ஆக ஒரு மனிதன் தனது வாழ்நாளில் சிறப்புடன் வாழ்வதற்கோ அல்லது பலதரப்பட்ட கஷ்டங்களை சந்திப்பதற்கோ கிரகங்கள் முக்கிய காரணமாக அமைகின்றன. இதில் எந்த ஐயமும் இல்லை.

சில கிரகங்களின் ஆக்கிரமிப்புகளால் சிலர் தங்களது வாழ்கையில் கீழ்க்கண்ட தோஷங்களை அடைந்து, மிகுந்த சிரமங்களுக்கு ஆளாகின்றனர். அத்தகைய தோஷங்களிலிருந்து விடுவிக்கப்பட்டு மக்கள் தங்களது வாழ்க்கையில் சகல செல்வங்களுடன் சிறப்புடன் வாழ்வதற்கு எங்கள் குருஜி.P.D.S.சரவணன் அவர்களை அணுகி சம்மந்தப்பட்ட தெய்வ பரிகாரங்கள் செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

Sri-Balaji-Jothidam-in-Tamil

புத்திர தோஷம்

புத்திர தோஷம் என்பது ஒவ்வொரு லக்கினத்திற்கும் வேறுபடும். பொதுவாக எந்த லக்னமாக இருந்தாலும் 5ஆம் இடம்தான் புத்திர ஸ்தானத்தை குறிக்கும். எனவே, அந்த 5ஆம் இடத்தை முக்கியமாக பார்க்க வேண்டும்.

“சேர்த்து வைத்த புண்ணியம்தான் குழந்தையாகப் பிறக்கும்” என்று பழமொழி உண்டு. அந்த வகையில் 5ஆம் இடம் பூர்வ புண்ணிய ஸ்தானமாகவும் திகழ்கிறது. தாய்மாமன், தாய்வழி உறவுகள், மனப்பான்மை ஆகியவற்றைக் குறிப்பதும் 5ஆம் இடம்தான். 

ஐந்தாம் இடத்தில் பாவ கிரகங்கள் (ராகு, செவ்வாய், சனி) அல்லது சூரியன் அமர்ந்தால் ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் போகும் அல்லது தாமதமாக கிடைக்கும். ஒருவேளை 5ஆம் இடத்தில் உள்ள பாவ கிரகங்களை சுபக் கிரகங்கள் பார்த்தால் (ஒவ்வொரு லக்னத்திற்கும் சுபகிரகங்கள் வேறுபடும்- மேஷத்திற்கு சந்திரனும் சுபக்கிரகம்) குழந்தை பாக்கியம் கிடைக்கும். 

Sri-Balaji-Jothidam-in-Tamil
நாக தோஷம்

நாக தோஷம் என்பது கிராமப்புறங்களில் பிரசித்திபெற்றது. கழுத்தில் மாலைப் போட்டுக் கொண்டு, அதாவது கொடி சுத்தி குழந்தைப் பிறப்பது போன்றவையும் எல்லாம் நாக தோஷத்தினால் ஏற்படுவது என்பது நம்பிக்கை.

ராகு - கேதுவின் ஒளிக்கற்றை, அதாவது கிரகணங்களால் பாதிக்கப்படுபதனால் ஏற்படும் விளைவுகளை நாக தோஷம் என்கிறோம். ஒரு சில குழந்தைகள் பிறக்கும்போதே மஞ்சள்காமாலை நோயுடன் பிறக்கின்றன. இதுவும் கிரகண பாதிப்புதான் காரணம்.

நாக தோஷம் வலுவாக இருக்கும் பிள்ளைகளுக்கு பாம்பு போலவே மச்சம் இருக்கும். தொடை, தலை போன்று ஒவ்வொரு இடத்தில் இருக்கும் மச்சத்திற்கும் ஒவ்வொரு பலன். அதற்கேற்ற பலன்களை அது கொடுக்கும்.

நாகப் பிரதிஷ்டம் என்பது ஆண் பாம்பும் பெண் பாம்பும், நாகப்பாம்பும், சாரைப் பாம்பும் இணைவது போன்று கல்லில் வடித்து அரசும், வேம்பும் சேர்ந்திருக்கும் இடத்தில் பிரதிஷ்டை செய்தால் விசேஷம் என்று மனுநீதி என்ற நூலில் கூறப்பட்டிருக்கிறது.

Sri-Balaji-Jothidam-in-Tamil

கால சர்ப்ப தோஷம்

ராகு & கேது ஆகிய கிரகங்களை அவர்கள் கொடிய சர்ப்பத்திற்கு நிகராக ஒப்பிட்டு எழுதியும், அந்த இரு கிரகங்களுக்கு நடுவில் மற்ற ஏழு கோள்களும் வானத்தில் இருக்கும் நிலையைச் சர்ப்பகாலம் என்றும், அந்தக்காலகட்டத்தில் பிறக்கும் குழந்தைகளை காலசர்ப்பத்தில் பிறந்த சிசுக்கள் அல்லது ஜாதகர்கள் என்றும் எழுதி வைத்துள்ளார்கள்.

ஒரு ஜாதகத்தில் ராகு & கேது இருக்கும் இடங்களுக்குள் உள்ள ஏழு ராசிகளுக்குள் மற்ற ஏழு கிரகங்களும் இருந்து மீதி ஐந்து ராசிகள் காலியாக இருக்கும் நிலைதான் கால சர்ப்ப தோஷம் ஆகும்.

Sri-Balaji-Jothidam-in-Tamil

செவ்வாய் தோஷம்

ஜென்ம லக்னம், சந்திர லக்னம், சுக்கிர லக்னம் இவைகளுக்கு 1,2,4,7,8,12 ஆகிய ஸ்தானங்களில், ஏதாவது ஒரு ஸ்தானத்தில் செவ்வாய் நின்றால் செவ்வாய்தோஷமாகும். ஆணின் இலக்கனத்திற்கு 2,7ல் செவ்வாய் இருக்கும்போது பெண்ணுக்கு 4,12 ல் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷமாகும்.

நமது உடம்பிலே ஓடும் இரத்தத்தின் அளவு , அது செல்லும் குழாய்களின் அமைப்பு, அது செல்லும் வேகம் , அது உற்பத்தியாகும் திறன், எந்தந்த உடல் உறுப்புகளுக்கு எவ்வளவு இரத்தம் செல்லும் என்பன பற்றிய விவரங்களை முழுமையாக அறிவிப்பது ஜாதகத்திலிருக்கும் செவ்வாய்தான்.

ஒரு ஜாதகத்திலே செவ்வாய்தோஷம் இருக்கிறது என்று சொன்னால் அவருக்கு இரத்தம் எங்கு, எந்தமாதிரி செல்கிறது என்பதை வைத்து இவருக்கு இது எந்த மாதிரி விளைவுகளை உருவாக்கும் என்பதை கண்டு அதற்கு பொருத்தமான இணையை தேர்வு செய்வது வழக்கமாகும்.

உதாரமாக பாலின உறுப்புகளுக்கு அதிகளவில் இரத்தம் செல்லும்போது காம உணர்வு அதிகமாக இருக்கும் காம விளையாட்டும் அதிகமிருக்கும் எனவே அதற்கு சமமான ஜோடி சேர்த்தால்தான் அவரது மனம் வேறுநபரை நாடாது. கணவன் மனைவி ஒற்றுமையும் நன்றாக இருக்கும். இப்படியாக ஒவ்வொரு உறுப்புக்கும் எவ்வளவு இரத்தம் செல்கிறது அங்கு என்னபடியான விளைவை ஏற்படுத்துகிறது என்பது விவரங்களை ஜாதகத்தில் இருக்கும் செவ்வாயை வைத்து அறியலாம்.

"Sri-Balaji-Jothidam-in-Tamil"

புனர்பூ தோஷம்

திருமண நிகழ்ச்சியில் இன்றைய காலத்தில் மிகப்பெரிய பிரச்சினையை ஏற்படுத்துவது இந்த புனர்பூ தோஷம்.

நீங்கள் பார்த்து இருக்கலாம் இருவீட்டிலும் பேச்சு வார்த்தை நடத்திக்கொண்டு இருப்பார்கள் நடத்திக்கொண்டு இருக்கும் போது திடீர் என்று திருமண பேச்சு முறிந்து விடும். சில பேருக்கு நிச்சயதார்த்தம் நடந்துமுடிந்திருக்கும் ஏதாவது ஒரு காரணத்தால் திருமணம் நிச்சயதார்த்துடன் முடிந்துவிடும். சில பேருக்கு இந்த விசயத்தில் பெரிய பிரச்சினையை உருவாகி கோர்ட் கேஷ் என்று அழைந்துக்கொண்டுருப்பார்கள். இது எல்லாம் புனர்பூ தோஷத்தால் உருவாகிறது.

சனியும் சந்திரனும் சேர்ந்து செய்கிற வேலை புனர்பூ தோஷம் உருவாகிறது. சனியும் சந்திரனும் ஒன்றாக சேர்ந்து இருந்தால் அல்லது சனியின் பார்வையில் சந்திரன் இருப்பது அல்லது இருவரும் ஒரு அதிபதி நட்சத்திரத்தில் பயணிப்பது இதனால் புனர்பூ தோஷம் உருவாகிறது.

வி​ரைவு ​தேடல்
empty row
empty row
Powered by
Copyrights © Sri Balaji Jothidam, Paramakudi 2013-2014. All Rights Reserved.