Sri-Balaji-Jothidam-in-Tamil
Sri-Balaji-Jothidam-in-Tamil

Sri-Balaji-Jothidam-in-Tamil 
நவக்கிரகங்கள்

இந்த பிரபஞ்சத்திற்கே மூலமாகவும் எந்த ஒரு உயிருக்கும் ஆதார சக்தியாகவும் விளங்குவது சூரியன்.

இந்த சூரியனிலிருந்து சிதறி உருமாறி, குளிர்ந்து உருவானவைகளே நவக்கிரகங்கள். "நவ" என்றால் ஒன்பது, "கிரகங்கள்" என்றால் ஈர்க்கும், கிரகிக்கும் தன்மை கொண்டவை என்று பொருள்.

ஆகவே ஒன்பது கோள்கள் என்பதையே "நவக்கிரகங்கள்" என்று அழைக்கிறோம்.

Sri-Balaji-Jothidam-in-Tamil
1.சூரியன்

சூரிய பகவனுகுரிய தலம் : சூரியனார் கோவில்

இது தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் வட்டத்தில் ஆடுதுறைக்கு வடக்கே இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

இங்கு சென்று சூரிய பகவானை வழிபடு முன் சூரியன் வழிபட்டு பேறுபெற்ற திருமங்கலன்குடிக்குசென்று வழிபட வேண்டும் என்பது சாஸ்திர விதி.

Sri-Balaji-Jothidam-in-Tamil
2. சந்திர பகவான்

சந்திர பகவானுக்குரிய ஸ்தலங்கள் : திங்களூர் மற்றும் திருப்தி

தஞ்சை மாவட்டம் திருவையாறு வட்டத்தில் திருவையாறிலிருந்து - கும்பகோணம் செல்லும் சாலையில் 4 கி.மீ. தொலைவில் (கைலாசநாதர் சாமி) சந்திரன் ஸ்தலம் அமைந்துள்ளது.

 

Sri-Balaji-Jothidam-in-Tamil
3.செவ்வாய்

செவ்வாய் பகவானுக்குரிய ஸ்தலங்கள் : வைத்தீஸ்வரன் கோவில் , திருச்சிறுகுடி மற்றும் பழனி.

நாகை மாவட்டம் சீர்காழி தாலுக்கா மாயவரம் அருகில் உள்ளது வைத்தீஸ்வரன் கோவில் ஆகும். இது செவ்வாய் பகவனுகுரிய பிரசித்தி பெற்ற ஸ்தலம் ஆகும்.

 

Sri-Balaji-Jothidam-in-Tamil
4.புதன்

புத பகவானுக்குரிய ஸ்தலங்கள் : திருவெண்காடு மற்றும் திருவாலவாய் (மதுரை)

நாகை மாவட்டம் சீர்காழி தாலுக்கா, பூம்புகார் சாலையில் சீர்காழியிலிருந்து பத்து கி.மீ. தொலைவில் திருவெண்காடு எனும் புத பகவான் சன்னதி உள்ளது.

 

Sri-Balaji-Jothidam-in-Tamil
5.குரு (வியாழன்)

குரு பகவானுக்குரிய ஸ்தலங்கள் : ஆலங்குடி, திருவலிதம் மற்றும் திருச்செந்தூர்

கும்பகோணத்தில் இருந்து நீடாமங்கலம் - மன்னார்குடி செல்லும் சாலையில் 17 கி.மீ. தொலைவில் ஆலங்குடி எனும் குரு பகவான் சன்னதி அமைந்துள்ளது.

 

Sri-Balaji-Jothidam-in-Tamil
6.சுக்கிரன்

சுக்கிர பகவானுக்குரிய ஸ்தலங்கள் : கஞ்சனூர், திருநாவலூர் மற்றும் ஸ்ரீரங்கம்

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து (கல்லணை - பூம்புகார் சாலை வழியாக) 18 கி.மீ. தொலைவில் கஞ்சனூர் எனும் சுக்கிர பகவான் சன்னதி அமைந்துள்ளது.

 

Sri-Balaji-Jothidam-in-Tamil
7.சனி பகவான்

சனி பகவானுக்குரிய ஸ்தலம் : திருநள்ளாறு

புதுச்சேரி மாநிலம், காரைக்களிலிருந்து 5 கி.மீ. தொலைவில் திருநள்ளாறு எனும் சனி பகவான் சன்னதி அமைந்துள்ளது.

 

Sri-Balaji-Jothidam-in-Tamil
8.ராகு பகவான்

ராகு பகவானுக்குரிய ஸ்தலங்கள் : திருநாகேஸ்வரம், திருகாலஹத்தி மற்றும் ராமேஸ்வரம்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகர்க்கு கிழக்கே 7 கி.மீ. தொலைவில் திருநாகேஸ்வரம் எனும் ராகு பகவான் சன்னதி அமைந்துள்ளது.

 

Sri-Balaji-Jothidam-in-Tamil
9.கேது பகவான்

கேது பகவானுக்குரிய ஸ்தலங்கள் : கீழப்பெரும் பள்ளம், காலஹத்தி

நாகை மாவட்டம், பூம்புகாருக்கு தெற்கே 1 கி.மீ. தூரத்தில் கீழப்பெரும் பள்ளம் எனும் கேது பகவான் சன்னதி அமைந்துள்ளது.

வி​ரைவு ​தேடல்
empty row
empty row
Powered by
Copyrights © Sri Balaji Jothidam, Paramakudi 2013-2014. All Rights Reserved.